தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, May 11, 2012

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் இருதய நோய் ஏற்படாது!!


image
லண்டன், ஏப். 28-
முட்டை சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது என்ற விவரம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதில் புரோட்டீன்கள், வைட்ட மின்கள், தாதுக்கள் உள்ளிட்ட அனைத்து சத்துக்களும் உள்ளன.
மேலும் அதில் உள்ள மஞ்சள் கருவியில் டிரைப் டோபோன், டைரோசின் என்ற 2 வித அமியோ அமிலங்கள் உள்ளன. இவை அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.
எனவே, முட்டை சாப்பிட்டால் இருதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படாது. இந்த தகவலை அல்பெர்பா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு முட்டை சாப்பிட்டால் அது ஒரு ஆப்பிள் சாப்பிடுவதற்கு சமமாகும்.
அந்த அளவுக்கு அதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே, தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும். அதை வறுத்தோ, அவிய வைத்தோ சாப்பிடுவது சரியல்ல. ஏனெனில், அவ்வாறு சாப்பிடும்போது அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு பாதியாக குறைந்து விடும். எனவே அதை மைக்ரோ ஓவனில் பாதிஅளவு வேகவைத்து சாப்பிடுவதே சிறந்தது என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment