தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 மே, 2012

சக்கரங்கள்,96 தத்துவங்கள் - பாகம்1, 2


சக்கரங்கள்,96 தத்துவங்கள் - பாகம்1, 2

------------------------
ஆக்கம்: சுதாகர் பாண்டியன்

மனித உடல் கண்களுக்கு புலனாகும் ஸ்தூல சரீரம் மற்றும் புலனாகாத சூக்கும சரீரமும் கொண்டது. சக்கரங்கள் என்பவை மனித உடலின் சூக்கும சரீரத்தில் அமைந்த சக்தி மையங்களாகும். இவை மொத்தம் ஏழு, அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், ம்ணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரதளம் என்பவை ஆகும். இது முதுகெலும்புத்தண்டின் கீழிருந்து மேல் நோக்கி நெடுகிலும் வரிசையாக அமைந்துள்ளது. இந்த சக்கரங்கள் உண்மையில் ஸ்தூல உடலில் கிடையாது, ஆனால் சூக்கும உடலில் உண்டு.

மனிதனின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் இந்த சக்கரங்கள் கட்டுப்படுத்துகின்றன. இது ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான தன்மைகளையும், உணர்வுகளையும் மனதுக்கும்,உடலுக்கும் அளிக்கக்கூடியவையாகும்.

இந்த அதிசய சக்கரங்களைப் பற்றி பார்ப்போம்,

ஒவ்வொரு சக்கரமும் தாமரை வடிவினைக்கொண்டவை, சாதாரணமாக மலராத நிலையில் உள்ளன, யோகப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இவை மலர்கின்றன.

ஒவ்வொரு சக்கரத்திற்கும் பல இதழ்கள் உண்டு. இந்த இதழ்களின் எண்ணிக்கை ஆரம்ப நிலையிலிருந்து, அதாவது மூலாதாரத்திலிருந்து படிப்படியாக மோல்நோக்கி அதிகரிக்கும். ஒவ்வொரு சக்கரங்கத்திற்க்கும் ஒரு ஆண் தெய்வம், மந்திரம், நிறம் ஆகியவை உண்டு. மேலும் சக்கரத்திலுள்ள தாமரையின் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு மந்திர எழுத்து இருக்கிறது. பஞ்ச பூதங்களான நிலம்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் ஆகாயம் இவற்றுடன் ஒவவொறு சக்கரமும் தொடர்பு கொண்டுள்ளது.

இவ்வாறு ஆண் தன்மையுடைய இச்சக்கரத்தில் பெண் வடிவாகிய குண்டலினி சக்தியானது பாயும்போது அதன் பெயர் சக்கரத்திற்கு ஏற்றார்போல் மாறுபடுகின்றது.அதுவே ஒவ்வொரு சக்கரத்தின் பெண் தெய்வமாகும். ஆண் வடிவாகிய சக்கரத்தில் பெண் வடிவாகிய குண்டலினி சக்தியானது சேர்ந்து உடலுக்கும், மனதுக்கும் புதிய சக்திகளையும், மாற்றங்களையும் தருகின்றன. இதுவே யோகத்தினால் கிடைக்கும் பயன் ஆகும்.

சூக்கும உடலில் காணப்படும் இந்த சக்கரத்தின் இருப்பிடங்களை ஸ்தூல உடலுடன் தொடர்பு படுத்தி தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அப்போதுதான் மிகச்சரியாக குண்டலினி யோக தியானத்தினை பிழையின்றி செய்யமுடியும்.

ஆண்களுக்கு மூத்திரத்துவாரத்துக்கும் மலத்துவாரத்துக்கும் உள்ள இடைவெளியிலும், பெண்களுக்கு பெண்குறியின் உட்புறம் கருப்பைவாசல் அருகிலும் மூலாதாரச்சக்கரமானது அமைந்துள்ளது.

மூலாதாரச்சக்கரத்திற்கு சற்று ஏற்புறமாக,சுமார் நான்கு விரல் மேலே சுவாதிஷ்டானம் உள்ளது.

மூன்றாவது சக்கரமான ம்ணிபூரகம் நாபியின் பின்னே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.

இதன் பின்னால் இதயத்துக்கு நேர் பின்புறம் முதுகுத்தண்டில் அநாகத சக்கரமானது அமைந்துள்ளது.

விசுக்தி சக்கரம் மைய கழுத்துக்குப் பின்னால் அதே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.

ஆக்ஞை சக்கரம் முதுகுத்தண்டின் உச்சியில், இரு புருவங்களுக்கும் இடையே நேர் பின்புறம் அமந்துள்ளது.

கடைசியில் சகஸ்ரதளமானது தலையின் மேற்புறம் கவிழ்ந்த நிலையில் ஆயிரம் இதழ்களுடன் காணப்படுகிறது.

மேலும் மூலாதாரமானது நிலத்துடனும், சுவாதிஷ்டானம் நீருடனும், மணிபூரகம் காற்றுடனும், அநாகதம் நெருப்புடனும், விசுக்தி ஆகாயத்துடனும் தொடர்பு கொண்டுள்ளன.

தொடரும்... நன்றி♥

96 தத்துவங்கள் - பாகம் 1

ஆக்கம்: இரத்திகா மோகன்

இந்த 96 தத்துவங்களின் படி தான் இந்த உலகமும், நாமும் இயங்குகின்றோம். இதில் 20 வகைகள் உண்டு. தினமும் ஒரு வகை பார்ப்போம்.

சித்தர்கள் சொன்ன 96 தத்துவங்களை விளக்கும் பல பிரிவுகள் உள. அவற்றுட் சில:

1 . சிவப்பிரகாசக் கட்டளை
2 . வேதாந்த தத்துவக் கட்டளை
3 . தத்துவ தீபிகை 96
4 . சித்தாந்தக் கட்டளை
5 . யூகி சிந்தாமணி 

இவர்கள் அனைவரும் தத்துவங்களை வெவ்வேறு விதமாக விளக்கியுள்ளனர். இதில் யூகி சிந்தாமணி அவர்கள் கூறியதே சிறந்ததெனச் சான்றோர் கருதுகின்றனர்.

அதன் விரிவாக்கம் :

"உறுதியாம் பூதாதி யோரைந் தாகும்
உயர்கின்ற பொறி ஐந்து புலன் ஐந்தாகும்
கருதியாய் கன்ம விந்திரியம் ஐந்தும்
கடிதான ஞானவிந்திரியம் ஐந்தும்
திருதியாம் தீதாய கரணம் நான்கும்
திறமான வரிஒன்றும் நாடி பத்தும்
மருதியாம் வாயுவது பத்தும் ஆகும்
மகத்தான விஷயமஞ்சு கோசமஞ்சே"

"அஞ்சவே ஆதார மாறு மாகும்
அறிய மண்டல மூன்று மலமூன்றாகும்
தொஞ்சவே தொடமூன்றி டனை தான் மூன்று
தோதமாங் குணமூன்று வினை இரண்டாம்.
தஞ்சவே ராகமெட்டு வவத்தை ஐந்து
தயங்கியதோர் கருவிகடாம் தொநூற்றாறு
ஒஞ்சவே ஒவ்வொன்றாய் விரித்துச் சொல்வேன்
உறுதியாம் பூதாதி உரைக்கக் கேளே."

-தொடரும்.-நன்றி.-

96 தத்துவங்கள் - பாகம் 2

பாட்டின் பொருள்
ஆக்கம்: இரத்திகா மோகன்

பாட்டின் பொருளை அறியுமுன் சிறுகுறிப்பு. இது சித்தர்களின் வரலாறோ அல்லது அவர்களின் தொடக்கமோ அல்லது அவர்களை ஆராய்வதற்கான பதிவோ அல்ல.

மாறாக இது சித்தர்களின் அறிவியல் கண்ணோட்டம் பற்றியது. அறிவியலின் தொடக்கம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

இந்த உலகத்தையும், இந்த உலகத்தின் செயல்களையும், நாம் ஒவ்வொருவரின் செயல்களையும், மொத்தத்தில் அனைத்தையுமே இந்த 96 தத்துவங்களில் அடக்கியுள்ளனர்.

இது நாம் அனைவரும் ஆச்சரியப்படக் கூடியதும், பெருமை படக்கூடியதுமான ஒன்று. நம் முன்னோரின் அறிவியலின் முயற்சியால் தற்போது காலத்தின் கட்டாயத்திற்காக அவர்கள் கண்டுபிடித்தவைகளை மீட்டெடுக்க முயலுகிறோம். என்றோ அவர்களுக்கு அவசியப்படாத காலத்திலேயே கண்டுபிடித்து நமக்காக தந்து சென்றுள்ளனர் என்பது வியப்புக்குரிய ஒன்றல்லவா!

இப்பொழுது நிலவும் பரபரப்பான வாழ்க்கையில், நவீன அறிவியலின் முன்னேற்றம் எங்கோ சென்று கொண்டிருக்கும் கால கட்டத்தில் இது தேவைதானா எனப்பலரும் எண்ண வாய்ப்பு உள்ளது? ஏன் எனக்கே அந்த எண்ணம் உண்டு. இருப்பினும் சித்தர்களின் அறிவியல் காலங்களைக் கடந்தும், எக்காலத்திலுமே அழியா மெய்யறிவாக இருப்பது என்பது வியத்தகு நிதர்சனம்.

அவர்களுக்கு தெரியாத ஒன்று எதுவுமே இந்த உலகில் இல்லை. செயற்கைக்கோள் (Satellite) வைத்து நாம் பரீட்சிக்கும் பல விடயத்தை எந்த ஒரு சாதனமும் இன்றி அன்றைக்கே நம் கோள்களைப் பற்றியும் அவைகளின் செயல்களைப் பற்றியும், மனிதனுக்கும் அதற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் தெளிவாகவே சொல்லுகின்றனர். இதை பற்றி அனைவரும் என்ன நினைகிறீர்கள்?

சரி, இனி நேற்றைய பதிவின் பாடல்களின் பொருளைப் பார்ப்போம். 

பாடல்கள்:

"உறுதியாம் பூதாதி யோரைந் தாகும்
உயர்கின்ற பொறி ஐந்து புலன் ஐந்தாகும்
கருதியாய் கன்ம விந்திரியம் ஐந்தும்
கடிதான ஞானவிந்திரியம் ஐந்தும்
திருதியாம் தீதாய கரணம் நான்கும்
திறமான வரிஒன்றும் நாடி பத்தும்
மருதியாம் வாயுவது பத்தும் ஆகும்
மகத்தான விஷயமஞ்சு கோசமஞ்சே"

"அஞ்சவே ஆதார மாறு மாகும்
அறிய மண்டல மூன்று மலமூன்றாகும்
தொஞ்சவே தொடமூன்றி டனை தான் மூன்று
தோதமாங் குணமூன்று வினை இரண்டாம்.
தஞ்சவே ராகமெட்டு வவத்தை ஐந்து
தயங்கியதோர் கருவிகடாம் தொநூற்றாறு
ஒஞ்சவே ஒவ்வொன்றாய் விரித்துச் சொல்வேன்
உறுதியாம் பூதாதி உரைக்கக் கேளே."

பாட்டின் பொருள்

1 .பூதம் 5

2 .பொறி 5

3 .புலன் 5

4 .கன்மேந்திரியம் 5

5 .ஞானேந்திரியம் 5

6 .கரணம் 4

7 .அறிவு 1

8 .நாடி 10

9 .வாயு 10

10 .விசயம் 5

11 .கோசம் 5

12 .ஆதாரம் 6

13 .மண்டலம் 

14 .மலம் 3

15 .தோசம் 3

16 .ஈடனை 3

17 .குணம் 2

18 .வினை 2

19 .ராகம் 8

20 .அவத்தை 5

மொத்தமாக 96



மேற்கூறிய பாடலில் இருக்கும் பொருள் இந்த 20 பெயர்களும் அவற்றின் வகைகளும். இனி இதன் விளக்கவுரை காண்போம்..!!!!

தினமும் ஒவ்வொன்றாக பார்போம்..

பூதம் - 5

1 .மண் (பிருதிவி)

2 . நீர் (அப்பு)

3 . தீ (தேயு)

4 .வளி(வாயு)

5 .ஆகாயம் (விசும்பு)



பூதங்களை உடற்கூறுகளுடன் ஒப்பிடுதல்:

மண் : எலும்பு, தோல், தசை, முடி, நரம்பு மற்றும் நாற்கோணம் கொண்ட மூலாதார சக்கரத்தை குறிக்கும்.

நீர் : இரத்தம், கொழுப்பு, வெண்ணீர், சிறுநீர், மூளை மற்றும் மூன்றாம் சக்கரத்தை குறிக்கும்.

தீ : இறுமாப்பு, சோம்பல், மைதுனம், அச்சம், தூக்கம் மற்றும் மூன்றாம் சக்கரத்தை குறிக்கும்.

வளி : ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், நிற்றல் மற்றும் அறுகோணம் என்கிற உடற்சக்கரத்தை குறிக்கும்,

ஆகாயம் : ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனை மற்றும் வட்டமான உடற்சக்கரத்தையும் குறிக்கும்.


இதில் சக்கரம் என்று கூறி இருப்பது ஆதாரங்களை. ஏற்கனவே இந்தப்பக்கத்தில் (http://www.facebook.com/Siddhars) இதைப் பற்றிய குறிப்புக்களும் பின்னூட்டங்களும் உள்ளது

நமது உடல் ஐம்பூத கூறுபாடுகளை உடையது என்பது இப்பாடல்களின் மூலம் தெளிவாகிறது.

இப்படி மெதுவாக செல்லும் போது உங்களுக்கு 'bore' அடித்துவிடக் கூடாது என்பதால், சில சில கண்டுப்பிடிப்புகளையும் அவ்வப்போது தெரிவிக்கிறேன் :)

சித்தர்களின் விஞ்ஞான மூளையின் ஒரு பகுதி,

இதயம் - என்னும் உறுப்பு சூரிய சக்திக்கு இயங்குவதாயும்

மூளை - சந்திரனால் இயங்குவதாயும்,

பித்தப்பை - செவ்வாய் என்னும் கிரகத்தோடு சம்பந்தப்பட்டதாயும்,

நீற்குண்டிக்காய்(kidney ) - சுக்கிரனோடும்,

நுரையீரல் - புதனோடும்,

கல்லீரல் - குருவோடும்,

மண்ணீரல் - சனியோடும், சம்பந்தப்பட்டனவாயும் இருகின்றன.

ஆகவே, மனிதவுடல் அமைப்பில் வெளியில் உள்ள கிரக, நட்ச்சத்திரங்களை அசைவிக்கும் சக்தி பொதிந்து கிடக்கின்றது என்பது புலனாகிறது. ஆன்மசக்தியின் பெருக்கால் மேற்சொன்ன நட்சத்திரம், கிரகம் முதலியவைகளை ஒரு ஞானி இயக்கவள்ளவனாகிறான். மற்றவர்களோ இந்நட்சத்திர கோள்களின் சக்தியால் இயக்கப்படுவர்கள் ஆகிறார்கள்.

.-நன்றி.-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக