தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, April 3, 2012

இணுவில் புதுபெரும்புலவர் வை.க.சிற்றம்பலம்


புதுபெரும்புலவர் வை.க.சிற்றம்பலம்

இவர் இணுவில் பகுதி யில் 1914ம் ஆண்டு செப் ரெம்பர் மாதம் 16ம் திகதி பிறந்தவர். இணுவிலில் பிறந்தாலும் அளவெட்டி யில் மணம் முடித்து அள வெட்டியில் நிரந்தரமாகவே வாழ்ந்தவர். யாழ்ப்பாணத்தைவிட்டு பாரிய புலப்பெயர்வு காரணமாகச் சென்று அவர் குடும் பம் முதலில் உடுவில், இணுவில் ஆகிய பகுதி களில் வாழ்ந்து இப்போது கொக்குவில் மேற்குப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர் தமது பாரியாரை புலம்பெயர்ந்து இணுவிலுக்குத் திரும் பிய காலத்தில் இழந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இவருக்கு ஒரு புதல்வியும் மூன்று புதல் வர்களும் உள்ளனர்.

இவர் ஆரம்பத்தில் தமிழ் ஆசிரியராகக் கடமை புரிந்தார். இப்போதைய தமிழ் ஆசிரியர் களும் அப்போதைய தமிழ்ச் சட்டம்பிமார்களும் அறிவால் வேறுபட்டவர்கள். இக்கால தமிழ் பட்ட தாரிகளுக்கு தொல்காப்பியம் பாடநூலாக அமைந்து இருப்பினும் அவர்களுக்கு ஆறுமுக நாவலர் எழுதி அளித்த இலக்கணச் சுருக்கத் தைத்தானும் சரியாக விளங்க ஆற்றல் உண்டோ என்பதை அவர்களில் சிலரைப் பொறுத்தவரை சந்தேகமானதே. ஆனால் பழைய சட்டம்பிமார் நன்நூல் காண்டி உரையையே கரைத்துக் குடித்தவர்கள். எழுத்தெண்ணிப் படித்தவர்கள் என்று சொல்லக் கூடிய பெருமைக்குரியவர்கள். ஆசிரியர் சிற்றம்பலமும் தமிழ்மொழி அறிவில் இந்த ரகத்தைச் சேர்ந்தவர் என்பது மிகையாகாது. தமிழ்மொழியில் திறமை வாய்ந்தவராக இருந்த போதும் அவர் செய்யுள் இயற்றும் வன்மையுடை யார் என்பது அவர் ஓய்வுபெறும் வயது வரும் வரை எவர்க்கும் தெரியாமலே இலைமறைகாய் போலும் குடத்துள் விளக்குப் போலும் தடற்றுள் வாள்போலும் வாழ்ந்துள்ளார். ஓய்வுபெற்ற பின் அவர் செய்யுள் இலக்கணத்தையும் பாட்டியல் இலக்கணத்தையும் நன்கு கற்று செய்யுள் இயற்றலில் தீவிரமாக ஈடுபட்டார்.

புதுக்கவிதைகள் மலிந்த இக்கால கவிஞர் கள் பலர்க்கு பழைய மரபுக்கவி இலக்கணம் தெரியாது. பழமையை கைவிட்டு புதுமை இலக் கியம் படைக்கும் இவர் களது செய்யுள்கள் பழமையுள் வேரூன்றாதவை. இக்கவிதையில் சாதாரண மக்களைக் கவரும் ஆற்றல் இருப்பது உண்மைதான். ஆனால் இவை தமிழ் படித்தவன், தமிழில் தோய்ந்தவன் என்னும் நிலையை உரு வாக்குவது இல்லை. இதற்கு உதாரணமாக ஒரு கவிதை காண்போம்.

“நெருட்டிப்பிடித்து நெருப்புக் கொழுத்தி
சுருட்டுப் பிடிக்கச் சுகம்”

இக்கவிதை இலக்கணப்படி ஒரு குறள் வெண்பாவாகும். இது மரபுக் கவிதை போல இருந்தும் இது ஒரு புதுமைக் கவியாகவே கொள்ளப்படும். மனி தனை மனிதப் பண்பு போற்றி வாழவைக்கும் ஆற்றல் இக்கவிக்கு இல்லை. இவ்வாறே இன்றைய புதுமையெழுத்தாளரின் கவிதைகள் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. மனிதனை மனிதனாக்க வேண்டிய கவிதை மனிதப் பண்பை இழப்பதற்கு வழிகாட்டியாக அமையக் கூடாது. பாலுக்கும் கள்ளுக்கும் உள்ள வேறு பாடு போன்று கவிதைகளிலும் வேறுபாடிருப்பதைக் கவிஞர்கள் உணரவேண்டும். இத் தகைய வேறுபாடுணர்ந்து இக்காலம் கவியமைக்கும் பழைய கவிதை மரபுணர்ந்தவரே முது பெரும்புலவர் அவர்கள்.
இப்புலவர் முப்பத்து மூன்றாவது வெளியீடாக உடுவில் சொர்ணசித்தி விநாயகர் கோயிற்காளி மீது பூட்டிய கதவைத் திறக்கும்படி ஒரு நூல் பாடினார் என்பதால் இவர் பல பிரபந்தங்களின் ஆசிரியரென்பது புலப்படு கிறது. இவருடைய செய்யுள்கள் ஓசை நயம், பொருள் நயம், இலக்கண நயம் அமைந்து விளங்குவதால் இவரொரு நல்ல கவிஞர் எனத் தமிழுலகங் கணிக்குமென்பதில் ஐயமில்லை.

கொழும்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சுவாமி விபுலானந்தர் கவிதைப் போட்டியில் ‘சுவாமி விபுலானந்தர் நான்மணிமாலை’ என்னும் இவரது பிரபந்தத்துக்கு முதற்பரிசு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ‘நல்லூர் இரட்டை மணிமாலை’ என்னும் நூலும் கொழும்பு தமிழ்ச்சங்க முதற்பரிசு பெற்றுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய செய்யுள்கள் தமிழறிவு பெரிதும் பெறார்க்கும் இலகுவாக விளங்கக்கூடிய தன்மை வாய்ந்தன. கடின நடையைப் பெற்று இரும்புக் கடலைபோல அமைவதே கவிதை என்பதை இவருடைய கவிதைகள் பொய்ப்பித்துள்ளன.
இவருடைய கவிதைகளின் சிறப்பைக் காட்டுவதற்கு அவரியற்றிய ‘பண்டிதமணி நான்மணிமாலை’யிலிருந்து சில செய்யுள் களை இங்கு தருவோம். முதலில் அந்நூலிலிருந்து ஒரு வெண்பாவைத் தருவோம்.

“செந்தமிழர் செய்த சிறந்த தவப்பயனால்
வந்துதித்த பண்டித மாமணியைச் – சிந்தித்தே
நாவலராய்ப் பாரதியாய் நானேந்திக் கூடலுறை
தேவருமாய்ப் பாடுவேன் தேர்ந்து”

இந்த வெண்பாவில் வந்துள்ள பதினான்கு தளைகளும் ஒன்றும் பிசகாமல் கவிதை இலக்கணகாரர் விதிக்கு ஏற்ப அமைந்திருப் பதைக் காணலாம். ஆதலால் இது மரபுக்கவியாக மிளிர்கிறது. இக்கால வெண்பா எழுது வோர், தளை பற்றிக் கவனம் செலுத்தாது தமது மனம்போன போக்கில் வெண்பா பாடுகிறார் கள். இப்படியான கற்றுக் குட்டிகள் தமது பாடல்களுக்கு வெண்பாவென்று பெயரிடாது வசன கவிதையென்றோ,வெண்பாப் போலியென்றோ வேறுவிதமாகவோ பெயரிடுவதே நல்லது. தொல்காப்பியம் புதுக்கவிதைகளுக்கும் இலக் கணம் வகுத்துள்ளது. தொல்காப்பியர் பாட்டு என்பன தவிர்ந்த அறுவகைக்கும் கட்டுப்பாடான இலக்கணம் வகுத்தாரல்லர். ஆதலால் புதுமைக் கவிஞர்கள் அவற்றின் வழி நமது செய்யுள் களை அமைப்பது நல்லது. வெண்பாஇ ஆசிரி யப்பாஇ கலிப்பாஇ வஞ்சிப்பா என்பவற்றை யாப் பிலக்கணகாரர் விதிக்கமைய அமைப்பது மரபுக்கவியாகும். மரபுக் கவிகளில் ஓசையும் பொருளும் நிறைந்திருக்கும். முதுபெரும் புலவருடைய வெண்பாவில் பலவித அமைதியும் நிரம்பியிருப்பது கண்டின்புறுக. இனி முதுபெரும் புலவர் யார்த்த கட்டளைக் கலித்துறையில் ஒன்று காட்டுவோம்.

“மதித்திடு நாவலர் மன்னிய வாழ்வில் – மயங்கிநின்றே
உதித்தெழுந் தேகற்ற வுண்மைப் புலவ – ருரைத்தவெலாம்
மதித்தனை யாழ்ந்து பரவினை யந்தகற் – பண்பிலுனை
துதித்தனன் யானுந் தொடர்ந்தென்றும் பாடச் – சுரந்தருனே”

கட்டளைக் கலித்துறை பாடுவது சிரமமான செயலேயாம். கட்டளைக் கலித்துறையும் கலித் துறைபோல் ஒவ்வோரடியும் ஐந்து சீர்களால் அமைவதே. எனினும் வெண்டளை தழுவி வர வேண்டுமென்பது ஒரு விதி. அடிகள் தோறும் ஈற்றுச்சீர் கூவிளங்காயாக அல்லது கருவிளங்காயாக அமைய வேண்டுமென்பது பிறிதோர் விதி. நேரசை முதலாகத் தொடங்கும் அடி பதினாறு எழுத்துக் கொண்டதாகவும் நிரையசை முதலாகத் தொடங்கும் அடி பதினேழெழுத்துக்கள் விலக்கப்படும். சீர்சிதைய வருவழி குற்றிய லுகரம் குற்றியலிகரம் என்பன மெய்யெழுத்துப் போலக் கொள்ளப்படும் என்பது புலவனுக்கு ஒரு சலுகையாகக் கொடுக்கப்பட்டது. கட்டளைக் கலித்துறைக்கு யாப்பிலக்கணகாரர் கூறிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்தனவாகவே முதுபெரும் புலவரின் கட்டளைக் கலித்துறை அமைந்திருப்பதைக் காண்க. முதுபெரும் புலவர் வை.க.சிற்றம்பலம் அவர்களுக்கு 2002ஆம் ஆண்டு இந்து கலாச்சார திணைக்களம் கலாபூஷண விருது வழங்கிக் கௌரவித்துள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது

..இவருக்கு சீதா இலச்சுமி (கொக்குவில் ஹிந்து கல்லூரி ஆசிரியை ,திரு பால யோகன் ஆசிரியர் manopark லண்டன் இவரின் மனைவி )என்னும் மகளும் .ஸ்ரீ ஸ்கந்த ராஜா ,சிவானந்த ராஜா ,சிவஞான ராஜா என்ற பிள்ளைகளும் உண்டு

இவருக்கு வைத்தியலிங்கம் (அதிபர் உடுவில் மான்ஸ் ஸ்கூல்) கனகசபை (முன்னாள் ஹை லண்ட்ஸ் கலூரி ஆசிரியர்) சந்திர சேகரம் பிள்ளை (இணுவில் கொழும்பு ) ஆச்சியம்மா ( பண்டிதை ) என்பவர்கள் கூடப் பிறந்து பெருமை சேர்க்கிறார்கள்



இணுவில் இல் பரராஜ சேகரன் ,செகராச சேகரன் என்ற மன்னர் ஆண்டு வந்த பூமி யாம் ,இங்கு குளம் ஓன்று இருந்ததாம் ,
போர்த்துக் கேயாருக்கு முன்னால்.... 

சேரர்கள் பலர் யாழ்ப்பாணத் துக்கு படை எடுத்த மூட்டம் ,குளத்துக்குள் தங்களின் நகைகளை எல்லாரும் போட்டு மூடி கஜசிங்கன் என்னும் பூதத்தை காவலுக்கு வைத்து விட்டார்களாம் .அந்த புதையல் மூவாயிரம் ஆண்டுகளின் பின் கஜசிங்கன் என்னும் பூதத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்குமாம்
அந்த புதையலை தேடிப்போன பலர் ...உயிரோடு மீண்டும் வரவில்லை என்று கூறுகிறார்களாம்
முனி அடிக்கும் என்ற வழக்கம் ஊரில் இப்போதும் இருக்குமாம்
அதற்காக கோவில் களில் களிப்பு செய்து இந்த குளத்தில் வாழும் கஜ சிங்கன் என்னும் பூதத்துக்கு
நள பாகம் அளிப்பது வழக்கில் உண்டாம் .



அந்தகுளத்தின் அடியில் விளாமரத்தின் அடியில் இருந்து 4 காத தூரமும்
புளிய மரத்தில் இருந்து பதினாறு காத தூரத்திலும் புதையல் இருக்கிறது ..இது உண்மை ஏன் என்றால் ,, இணுவிலை ஆண்ட குறு நிலா மன்னன்
செகராஜ சேகரன் ,பரராஜ சேகரன் படைகள் இணைந்து மூங்கிலால் படை அமைத்து வேலி போட்டு இருந்தார்கள் அது வில் போல அமைக்கப்பட்டு இருந்ததால் இணு (மூங்கில் ) +வில் (வளைவு)
என்று பெயர் பெற்றது உங்கள் ஊர்
தெலுங்கர்களை அழைத்து வந்து எல்லை ப பாது காப்பில் வைத்து இருந்திருக்கிறார்கள் இந்த தெலுங்கர்கள் பேசும் மொழி "கோண்டா "என்பதாகும் இதுவும் வில் போல அமைக்கப் பட்டிருந்ததால் கோண்டாவில் என்று பெயர் பெற்றது அதாவது கோண்டாவில் படை பாது காப்பு
உடு என்றால் சூழ்ந்திருத்தல் அல்லது அம்பு என்று சொல்லுவார்கள்
அதாவது இங்கு தான் உடு (அம்பு)+வில் காலாட்படை அம்ம்புவில் படைகளாக இருந்தார்கள்
கொக்கு என்றால் பரண் அமைத்து பதுங்கி விழித்து இருந்து பாது காக்கும் படை
இதுவும் வில் போல அமைக்கப் பட்டு இருந்ததால் கொக்குவில் என்று பெயர் வந்ததாம்

ந்தா’ என்னும் அரசரால் ஆளப்பட்ட இந்த ஊரில் தங்கியவர்களை ‘நந்தவரிகா’ என்று அழைத்தனர். அந்த வம்சாவளியில் வந்தவர்தான் .இவர்
இவரும் பரராஜ சேகரனும் நண்பர்கள் ,.இவரின் படைகள் எல்லைகளில் பாதுகாப்பாக நிறுத்தப் பட்ட இடம் நந்த வில் என்று அழைப்பார்களாம்
மேலும் பரராஜ சேகரனின் சகோதரன் பேராயிரவன் என்னும் மன்னனின் முனைப்பால் திருக்கோவலூரில் இருந்து வேளாளப் பிரபுக்கள் தருவிக்கப் பட்டார்கள்
பல வித விற்பன்னர்கள் வந்தார்கள் .எல்லோரும் உங்களின் ஊரில் பிறந்து வளர்ந்தே மற்ற ஊர்களுக்கு மாறி வளர்கிறார்கள்
இந்த பேராயிரவன் தமிழ் புலவனானான்
அவனின் வம்சாவழியில் வந்தவர் தான் புலவர் வை ,சிற்றம் பலம்

மேலும் புதையல் இருப்பதற்கு .....
இதை தேடி இந்திர லோகம் நாகலோகம் இதில் இருந்து அரம்பையர்கள் நாகக் கன்னிகை களாக வளர் பிறை சதுர்த்தியில் வெண் நாக உருவெடுத்து வந்து கஜ சிங்கன் என்னும் நாக பாம்பாகிய கஜமுக சிங்கனை தேடி வருவார்களாம் .( இப்போதைக்கு இது போதும் ..இவை யாவும் கோண்டா மொழி பேசும் தெலுங்கர்களின் அறிஞர்களின் வாயில் இருந்து அறிந்து கொண்டோம்



siri raja!

No comments:

Post a Comment