தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 1, 2012

இன்று நோபல் லாரேட் டாக்டர் சத்யேந்திரநாத் போஸ் அவர்களின் 118ம் பிற‌ந்ததினம்.


நோபல் லாரேட் டாக்டர் சத்யேந்திரநாத் போஸ் ஐன்ஸ்டைனுடன் கடிதத் தொடர்புகொண்டு, ஓர் ஆராய்ச்சியில் அவருக்குச் சமமாகப் பெயர் எடுத்த இந்திய விஞ்ஞானி

 சத்யேந்திரநாத் போஸ், க்வாண்டம் துகள்கள் இயங்கும் ஸ்டாடிஸ்டிக்கல் முறையைப் பற்றி ஐன்ஸ்டைனுக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினார். அதை ஐன்ஸ்டைன், ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட வைத்தார். அந்த முறைக்குத் தன் பெயருடன், போஸ் பெயரையும் ஆசையாகச் சேர்த்து ‘போஸ் - ஐன்ஸ்டைன் ஸ்டாடிஸ்டிக்ஸ்’ என்று விஞ்ஞானி ஐன்ஸ்டைனே பெயர் வைத்தார்.! அது தான் சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர்...அறிவியல் மர்றும் தத்துவ மேதை ஐன்ஸ்டைன்.!

அதன் பின், அணுவின் உட்கருவில் உள்ள ஒரு வகைத் துகள்களுக்கு ‘போஸான்’ என்ற பெயரும் கொடுத்தார்கள். சத்யேந்திரநாத் போஸை டாக்கா பல்கலைக்கழகத்தில் புரொபஸராக எடுத்துக் கொள்ள, ஐன்ஸ்டைன் சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். ‘இவருக்கு இல்லையென்றால் வேறு யாருக்கு?' என்று அதில் கேட்டிருந்தார். அதன் பின், அதிகாரிகள் விழித்துக்கொண்டு சத்யேந்திரநாத்துக்கு டாக்டர் பட்டம் அளித்தனர்.!

இன்று நோபல் லாரேட் டாக்டர் சத்யேந்திரநாத் போஸ் அவர்களின் 118ம் பிற‌ந்ததினம். 

No comments:

Post a Comment