தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 3 மார்ச், 2012

அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஏசு கிறிஸ்துவின் கல்லறை!!


கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறையை ஜெருசலேம் அகழ்வாராய்ச்சியாளர்கள் முழுமையாக ஆய்வு செய்ததில், இது ஏசு கிறிஸ்துவின் உடல் வைக்கப்பட்ட இடமாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் அமைந்திருக்கும் இந்தக் கல்லறை, கி.பி.70ம் ஆண்டுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. ஏசு கிறிஸ்துவின் தொடக்ககாலச் சீடர்கள் இதை அமைத்திருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்லறையில் இருக்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் “புனித ஜெகோவா விழித்தெழு” என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதை ரிமோட் கன்ட்ரோல் கமெரா உதவியுடன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதைப் போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் ஜோனா என்கிற தேவதூதரின் கதையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஜோனாவை விழுங்கிய பெரிய மீன் அல்லது திமிங்கலம், பிறகு அவரை விட்டுவிட்டதாக பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. மீனின் உருவத்தை கணணியின் உதவியுடன் பெரிதாக்கிப் பார்த்தபோது, அது ஜோனாவின் கதையைப் பிரதிபலிப்பதாக இருப்பது தெரியவந்தது.
கல்லறைப் பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் வாசகம், மீனின் உருவம் ஆகியவை “உயிர்த்தெழுதல்” என்கிற கிறிஸ்தவ நம்பிக்கையைக் காட்டும் வகையில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவரும், வடக்கு கரோலினா பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஜேம்ஸ் தபோர் கூறுகையில், யூதர்களின் முதலாம் நூற்றாண்டுக் கல்லறையில் உயிர்த்தெழுவது பற்றிய குறிப்பும், ஜோனாவின் கதையும் இருப்பதாக யாரும் கூறினால் அது சாத்தியமேயில்லை என்று நான் இதுவரை கூறிவந்தேன் என்றார்.
முதலாம் நூற்றாண்டுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவலை இணையத்தளத்தில் “பைபிளும் விளக்கமும்” என்கிற தலைப்பில் அகழ்வாராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இப்போது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் இந்தக் கல்லறை 1981-ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக