தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 9, 2012

காமராசர் முதலமைச்சராக இருந்த போது!


காமராசர் முதலமைச்சராக இருந்த போது அவரின் தாயார் சிவகாமி அம்மையார் சென்னையில் தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டு காமராசரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் இங்கு வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் எனக்கு கெட்டப்பெயர் தான் உருவாகும் என்று கூறி தாயாரின் விருப்பதை ஏற்க மறுத்தார். சில மாதங்களுக்குப் பிறகு சிவகாமி அம்மையார் காமராசரிடம் மேலும் ஒரு கோரிக்கையை வைத்தார். "நீ முதலமைச்சராக ஆகிவிட்டதால் என்னைப் பார்ப்பதற்கு நம் வீட்டிற்கு பலர் வருகிறார்கள். அவர்களுக்கு கலர் சோடா போன்றவற்றை வாங்கித் தர வேண்டிய உள்ளது. எனவே மாதந்தேறும் ரூ.150 ரூபாயை அனுப்பிவை என்றார். அதற்கு காமராசர் மாதம் ரூ.120 ரூபாயை அனுப்புகிறேன், அதைவிட ஒரு ரூபாய் கூட அதிமாக தரமுடியாது. கொடுக்கிறதையே சிக்கனமாகச் செலவு செய்துக்கொள் என்று இந்தக்கோரிகையையும் நிராகரித்தார். இன்று நடப்பதை எண்ணி பாருங்கள், கொலைவெறி வரும் !!


வ வு சிதம்பரம், காமராசர், அறிவாசான் பெரியார் இவர்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர். நமது தமிழர் சமுதாயத்தில் பிறந்தவர்களே. அவர்களுக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வு இன்றைய தலைவர்களிடம் இல்லாமல் போனது தமிழனின் துரதிஷ்டம்.


ஆதிசங்கரர், பட்டினத்தடிகள் போன்ற முற்றும் துறந்த முனிவர்கள் கூட, துறக்க முடியாமல் தவிர்த்த உறவு தாயின் உறவு. அந்த தாயையே தள்ளி வைத்த மனிதர் பெருந்தலைவர் அவர்கள். முருக தனுஷ்கோடி, சிவகாமி அம்மையாரை அழைத்து சென்னையில் வைத்து கொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, மறுத்த காமராஜ், அதற்கு சொன்ன காரணத்தை கேட்டால், அந்த மனிதன் எந்த அளவுக்கு தன்னலம் துறந்து இந்த நாட்டுக்காக உழைத்தார் என்ற உண்மை உலகுக்கு புரியும். எனக்கிருக்கும் ஆதங்கம் எல்லாம், இன்றைய இளைய சமுதாயம் இந்த மனிதனின் வாழ்க்கை வரலாறை உணரவேண்டும். துரத்ருஷ்ட் வசமாக அதை சொல்லும் தகுதியை கூட இன்று யாருக்கும் இல்லை.


Sarathy Sanganankulam 
வயதாகிபோன தாய் வாழ்ந்த வீட்டுக்கு, தனியாக தண்ணீர் குழாய் அமைத்தபோதும், வீட்டுக்கும் ஒரு மின்விசிறி யை வழங்கியபோதும், காமராஜ் அந்த தாயை பார்த்து கேட்ட கேள்விகள் நெஞ்சுருக வைப்பவை. எங்கள் திருநெல்வேலியில் பார்வதி தியேட்டர் திறப்பு விழாவுக்கு முதல்வராக இருந்த போது, காமராஜ் வந்தார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த பசுபதி க்கும், காமராஜருக்கும் நடந்த உரையாடல்கள், என்னால் முழுமையும் இங்கே பதிய முடியவில்லை. மகத்தான மனிதன் காமராஜ். புரிந்துகொள்ளட்டும் உலகம். இந்த மனிதனின் காலடிகள் பட்ட பூமியிலிருந்து நானும் பிறந்தேன் என்பதே எனக்கான நேர்மைக்கு அடித்தளம். ஒரு கணம் அந்த உன்னத தலைவனை நினைத்து உள்ளத்துள் உண்மைக்கு உரமேற்றும் வாய்ப்பை வழங்கிய அண்ணன் வால்டருக்கு நம் நன்றிகள்..





பெருந்தலைவர் காமராசர் டெல்லி காங்கிரஸை நம்பி, பலவற்றை கேட்டுப் பெறாமல் போனார். தமிழ்நாட்டிற்கு தம்மால் முடிந்ததை நேர்மையாக திட்டமிட்டே செய்துமுடித்தார். அதில் ஒன்று வைகையனை. நேர்மையான ஆட்சி முறையை நடைமுறைப்படுத்திய கர்ம வீரர் காமராசர் . இவரையும் , காங்கிரஸையும் நம்பி தமிழகம் இழந்தது ஏராளம் . தமிழக காமராசர் தொண்டர்களில் ஒருவரான , " தமிழருவி " மணியம் தமிழக இளைஞர்களுக்கு நல்ல வழிகட்டியாக இருந்து , கச்சத்தீவையும் / தமிழீழத்திற்கும் என்றும் தூணாக இருக்க வேண்டும் . அன்புடன், சோ.வீ. தமிழ்மறையான் .

No comments:

Post a Comment