தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 மார்ச், 2012

வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா?


வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா?

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான். ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.



**வாழைமரம் திருமண வீட்டின் முன் கட்டுவதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படும்,அது வாழை தன்னைக்கொடுத்து தன் பரம்பரையை வளர்க்கிறது,அது குலைதள்ளி அழிவை அடைந்து தன்னினம் தழைக்க வழிவிடுகின்றது!!பழத்தை பறவைகள்,விலங்குகள் உன்ன கொடுக்கிறது.ஆகையால் அதை நினைவு கூர்ந்து நாமும் அதுபோல குடும்பத்துக்கு  தியாகம் செய்யவேண்டும்,அனைத்து உயிர்களுக்கும் உதவ வேண்டும்  என்பதை ஞாபகப்படுத்தவே குலைதள்ளி வாழைப்பழங்களை கொண்ட வாழையை வரவேற்பு வாசலில் கட்டுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக