தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 மார்ச், 2012

நடிகை குமாரி சச்சு!!


நடிகை குமாரி சச்சு: என்.எஸ். சரஸ்வதி என்ற இயற் பெயர் கொண்டவர், டைரக்டர் ஏ.சி. சாமி அவர்களால் "ராணி" படத்தில் செய்யப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் "சொர்க்க வாசலிலும்", பின் "தேவதாசிலும்", சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, புகழ் பெற்ற, நடிகை குமாரி சச்சு, சுமார் 500 படங்களுக்கும் மேல் நடித்து, சின்னத்திரையிலும் முத்திரை பதித்தவர்.

மிகவும் பழமையும், பாரம்பர்யமும் மிக்க குடும்பத்தில் பிறந்து, தனது சிறந்த நாட்டிய மற்றும் குணசித்திர நடிப்பின் மூலம் பிரபலமடைந்தவர்...மாயாபஜார் (குட்டி வத்சலா),வீரத் திருமகன் ஆனந்தன்( 1961, ரோஜா மலரே ராஜகுமாரி) தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் "அன்னை" ( அழகிய மிதிலை நகரினிலே, புத்தியுள்ள‌ மனிதரெல்லாம்...சந்திரபாபு) போன்ற வெர்றிப் படங்கள் மூலம், ஜீபிடர், ஜெமினி, வாஹினி போன்ற பெரிய பானர்கள் இவர்றிலெல்லாம் வாய்ப்புகள் அவரை தேடிக் குவிந்தது.

கோவை செழியனின் தயாரிப்பில், இயக்குனர் சிரீதரின் "காதலிக்க நேரமில்லை", ஒரு பெரிய திருப்பு முனை என்பதை நாம் அறிவோம். திரு நாகேஷ் அவர்களுடன், காமெடி ட்ராக்...மலரென்ற முகமொன்று...சூப்பர் வெஸ்டர்ன் டான்ஸ்.! கே.பி. சாரின், பாமா விஜயம், பூவா தலையா போன்ற படங்கள் இன்னொரு மைல் கல். மேலும் சுருளிராஜன், தேங்காய் சீனீவாசன் மற்றும் திரு எம்.ஆர். ராதா போன்ற தமிழ் நகைச்சுவை ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றியவர் குமாரி சச்சு அவர்கள்.

சின்னத்திரை: மாண்புமிகு மேயர், தினேஷ் கணேஷ், காஸ்ட்லி மாப்பிள்ளை, வீட்டுக்கு வீடு லூட்டி, ஆனந்த பவனம். "நீ பாதி நான் பாதி"...டாக் ஷோ...சீனியர் சிட்டிசன்ஸ் இவை எல்லாம் பிரபலம்.

விருதுகள் : கலைமாமணி மற்றும் பாரத ரத்னா திருமதி எம்.எஸ். அவர்களிடமிருந்து "தியாகப் பிரம்ம ஞான சபா"...விருது (1990).

5 முதல்வர்கள்...பாரத ரத்னா, மக்கள் திலகம்...எம்.ஜி.ஆர். ஆந்திர சூப்பர் ஸ்டார் என்.டி.ஆர். முதல்வர் செல்வி ஜெ அம்மையார், கலைஞர் திரு மு.க., பேரரிஞர் அண்ணா இப்படி இந்தியாவின் 5 முதல்வர்களுடன் திரைப்படங்களில் பனியாற்றிய சிறப்பு உடையவர் குமாரி சச்சு அவர்கள்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலரும், குழந்தைப் பருவத்திலிருந்தே நடிக்கத் துவங்கி, கதாநாயகி, சிறந்த நகைச்சுவை மற்றும் குணச் சித்திர பாத்திரங்களில் மிளிர்ந்த நடிகையான குமாரி சச்சு அவர்களுக்கு இன்று 68ம் பிறந்தநாள். நமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக