தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, March 10, 2012

சொடக்குப்பூ என்ற பொட்டுப்பூ!


சொடக்குப்பூ என்ற பொட்டுப்பூ!
SODAKKU POO @ POTTUPOO !

மலையோரங்களில் காட்டுச்செடியில் வளரும் இதை "சொடக்குப்பூ" என்றும்
"பொட்டுப்பூ" என்றும் சொல்வர். சிறுமிகள் இந்த பூவை காம்புடன் பறித்து வாயில் போட்டு மெல்லிசாக கடித்து, உமிழ்நீர் கலந்து கொஞ்சம் கசக்கிய பின் கையில் எடுத்து பூவை வாயில் வைத்து ஊதி...பின் பூவின் இறுதிப்பகுதியில் காற்று வெளியேறாதபடி பெருவிரலையும், சுண்டு விரலையும் இணைத்துப்பிடித்து கன்னத்தில் வைத்து ”சொட் சொட்” என சொட்ட “விஷ்ங். விஷ்ங்..” என ஒலி வர சிறுமிகள் ஆனந்தப்படுவர். ஒரு பத்து நிமிடம் கழிந்ததும் பட்டென ஒலியுடன் தாடையில் பூவை அடித்து உடைப்பர். கன்னத்தில் வைத்து பொட் பொட் என உடைப்பதால் பொட்டுப்பூவாம்..கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக கிடைக்கும். தாத்தாக்கள் பாட்டிகள் சிறுமிகளுக்கு ஆசை ஆசையாய் பொட்டுப்பூ வாங்கிக்கொடுப்பர்.

No comments:

Post a Comment