தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 மார்ச், 2012

கரிகாற்சோழன் ஆட்சி தமிழரின் பொற்கால ஆட்சி !!!


கரிகாற்சோழன் ஆட்சி தமிழரின் பொற்கால ஆட்சி !!!

கரிகாற் சோழன் இன்று தமிழினத்தின் சொந்தக்காரன் .
திராவிடன் ஆனால் நாளை திராவிடனின் இனத்துக்காரன்
தமிழன் என்றால் பெருமை உன்னை சேரும் !.
திராவிடன் என்றால் பெருமை அவர்களை சேரும் !

கரிகாலன் ஆட்சி செங்கோலாட்சியாக இருந்தது.இவனுக்கு திருமா வளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப் பெயர்களும் உண்டு. கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப் பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. இவனது மேலாண்மையில் பல நாடுகள் இருந்த போதிலும் அங்கெல்லாம் பெருந்தன்மையுடன் நட்புற வையே ஏற்படுத்தியிருந்தான்.

மக்கள் பசி நீக்க உணவளிக்கும் அட்டில் சாலை என்ற ஒரு அன்ன சத்திரத்தை புகார் நகரில் அமைத்திருந்தான் .

காடுகளை வெட்டி விளை நிலங்களாக மாற்றினான் குளங்களை வெட்டி வெள்ள நீரை தேக்கி வைத்துÏ நிலங்களை நில வளமுள்ளவையாக மாற்றி நாட்டை செழிக்க செய்திருந்தான் . கரிகாலன் இலங்கை மீது மேற்கொண்ட போரில் வெற்றி பெற்றுÏÏ அங்கிருந்த 12 ஆயிரம் பேரை சிறை பிடித்து வந்து, காவிரியின் இரு புறமும் கரை அமைத்த செய்தியை, இலங்கையின் கடல் வழிச் செய்தி கோவை ஒன்றும், தெலுங்கு சோழர் கல்வெட்டுக்களும் குறிப்பிடுகின்றன.

தமிழர் நாட்டின் நெற் களஞ்சியமாக விளங்கும் தஞ்சையின் ஒரு பகுதி வறண்ட பகுதியாக இருந்தது.ஓடும் காட்டாறான காவேரியின் குறுக்கே வெறும் மணலை அடித்தளமாக கொண்டு ,பெரிய பாறாங் கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி 1080 அடி நீளத்திற்கும், 60 அகலத்திற்கும் கரிகாலன் கட்டிய கல்லணை இன்றளவும் உலகம் வியக்கிறது. தமிழன் தலை நிமிர்கிறான். காவிரி ஆற்றின் கரையை செப்பனிட்டு உயர்த்தி அமைத்து அதன் ஓடுபாதையையும் சீரமைத்து நாட்டின் வளத்தையும் பெருமையையும் உயர்த்தி இருக்கிறான் கரிகாலன்.

பருவக் காற்றை பயன்படுத்தி கப்பல் செலுத்தும் முறையை கண்டு பிடித்து, செயல் புரிந்தவர்கள் கரிகாலனின் முன்னோர்களே ஆவர் அது வரையிலும் துடுப்புகளால் செலுத்தும் முறையை பின்பற்றப் பட்டு வந்தது . அதை மேம்படுத்தி கரி காலன் காலத்தில் கடல் வணிகம் மிகச் சிறப்பாக நடை பெற்றிருக்கிறது.

நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி வளி தொழில்
ஆண்ட உரவோன் வருக

எனப் பாராட்ட பெற்றிருந்தான் கரிகாலன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக