தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 மார்ச், 2012




பூநகரியில் மட்டும் 1,000 ஏக்கர் நெற் செய்கை மழையால் அழிவுபாதிக்கப்பட்ட விவசாயிகள் உதவி வழங்கக் கோரிக்கை. கிளிநொச்சி பூநகரிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கால போக நெற்செய்கையில் 1000 ஏக்கர் வரையான நெற்பயிர்கள் சீரற்றகாலநிலை மற்றும் பருவ மழையினால் அழிவடைந்துள்ளதாக கமநலசேவை நிலைய புள்ளி விவரங்களில் இருந்து தெரியவருகிறது. கிளிநொச்சி பூநகரிப்பகுதியின் கூடுதலான பகுதிகளில் இவ்வாண்டு காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது 12 ஆயிரத்து 600 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கைகள் மேற்கொள்ளப்படவிருந்தன. இதில் 8 ஆயிரத்து 400 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் தற்போது பெய்த பருவமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 1000 ஏக்கர் வரையில் நெற் செய்கை அழிவடைந்துள்ளன.

இவை விதைப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட நாளில் இருந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவே முளைக்கவில்லை எனவும் இந்த 1000 ஏக்கர் நிலப்பகுதிகளும் மீள விதைப்பு செய்ய வேண்டியுள்ளதாகவும் இதனை மீளவும் விதைப்பதற்கு விதை நெல்லைப் பெற்றுத் தருமாறும் விவசாயிகள் கமநல சேவை நிலையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில இடங்களில் மீள விதைக்கப்பட்ட நெல் வயல்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.நெற்செய்கை இவ்வாறு அழிவடைந்துள்ளமையால் தமக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறினார்கள்.

இதேவேளை:
கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் சீரற்ற காலநிலை மற்றும் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நெற்செய்கை அழிவு குறித்த விவரங்கள் தற்போது திரட்டப்பட்டுவருவதாகவும் அவற்றின் முழுமையான விவரம் இதுவரை கிடைக்கவில்லை எனவும் கமநல சேவைகள் திணைக்கள வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக