தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

குடலிறக்கம் (ஹெர்னியா)-Hernia!!


ஹெர்னியா

இன்று சிம்பிள் சைன்ஸில் நாம் பார்க்க போகும் சப்ஜெக்ட் "ஹெர்னியா". இது பல பேருக்கு தெரியாத ஒரு விஷயம் ஆம் ஹெர்னியா ஒரு நோய் இல்லை இது ஒரு ரிப்பேர் தான். ஆம் சிம்பிள் ஹார்ட்வேர் ரிப்பேர் மாதிரி, ஒரு எக்ஸ்டர்னல் இஞ்சூரி மாதிரி தான் இதுவும். நம் நெஞ்சு எலும்புக்கும், பிறப்புருப்புக்கும் ஒரு பை போன்ற தசை வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் இந்த மெஷ் ( ஒரு ஹாமோக் போல ) இருக்கும் இந்த தசைதான் நம் குடலை தாங்கிபிடிக்கும் ஒரு பை போன்றது. இந்த தசை கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்கும் ஒரு பையை போன்றது. இந்த தசை டேமேஜ் ஆகும்பட்சத்தில் குடல் இறங்கி இது தான் குடல் இறக்கம் எனக்கூட அழைக்கப்டுகிறது. தொப்புள் கொடிக்கு நேர் கீழே தான் இந்த தசை கிழியும் வாய்ப்பு உள்ளது. இது சிலருக்கு மோசமாகி சிறு நீர் பை டேமேஜ் ஆகி பிறப்புறுப்பு அருகே மிகுந்த வீக்கத்துடன் இருக்கும்.

மொத்தன் ஐந்து வகை ஹெர்னியாக்கள் தான் ஃபேமஸ்

1. Inguinal hernia / 2. Incisional hernia / 3. Femoral hernia / 4. Umbilical hernia / 5. Hiatal hernia

சில பாடி பில்டர்ஸ், வெயிட் தூக்கும் சாம்பியன்ஸ், கடினமாக உழைக்கும் மூட்டை தூக்கும் தொழிலாலிக்கு தான் இந்த ஹெர்னியா வரும் என சிலர் நினைப்பார். சிலர் நன்கு சாப்பிட்டு ஒரு ஹெவி தும்மல் அல்லது தும்மலுடன் சேர்ந்த இருமல் வந்தாலும் இந்த தசை கிழிந்து ஹெர்னியா வரும் ஆபத்து உண்டு. சிலருக்கு ஹெர்னியா இருப்பது தெரியவே தெரியாது. ஆனால் சிலருக்கு வலி சும்மா அடி பின்னி எடுத்துவிடும். சில ஆண்களுக்கு விரை வீக்கம் மற்றூம் சின்ன லம்ப் எனப்ப்டும் கட்டி போன்ற ஒன்று இருக்கும் பட்சத்தில் உடனே சர்ஜரி தான் சரியான வைத்தியம்.

பெண்களுக்கு இது வரும் காரணம் முக்கியமாக ஓவர் வெயிட், வயிறு பகுதிகளில் வெயிட் போடுவது, அடிக்கடி பிரசவித்தல், அஸ்சைட்ஸ் எனும் திரவகம் அதிகமாக வையிற்றில் சுரத்தல், இயற்க்கை பிரசவம் சரியாக ஆகாமல் நிறைய நேரம் துடிக்கும் போது, வைற்றில் பெரிய கட்டி போன்ற விஷயங்களுக்கு கண்டிப்பாக ஹெர்னியா நிச்சயம். பெண்கள் புகை பழக்கம் கூட மெயின் ரீஸன் அதனால் இது ஆண்களுக்கு மட்டும் வரும் ஒரு பிரச்சினை இல்லை. சாப்பிட்ட பிறகு வைற்றின் பெல்ட், பேன்ட், மற்றூம் பாவாடை, சுரிதார் பாட்டத்தை அட்ஜ்ஸ் செய்யவே கூடாது. சாப்பிடும் முன் செய்யலாம் அல்லது சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து செய்யலாம். கர்ப்பபை எடுத்த தாய்மார்களுக்கு ஹெவியாக வேலை செய்தால் ஹெர்னியா நிச்சயம்.

ஹெர்னியா இருந்தால் வலி மற்றூம் அதிகம் தொல்லை இல்லாததால் உடனே அவர்கள் அறூவை சிகிச்சை செய்ய மறந்துவிடுவார்கள். ஆனால் உடனே செய்வது மேலும் தசை கிழியாமல் தடுக்க இயலும். ஒரு ஆர்டிஃபிஸியல் மெஷ் வைத்து பழைய மாதிரி தைத்து விடுவார்கள். எனக்கு தெரிந்து டாக்டர்கள் அந்த சமயம் அப்பன்டிக்ஸ் இருந்தால் அதையும் எடுத்து விடுவார்கள். அதிக கொழுப்பையும் முடிந்த வரை எடுத்து விடுவர்கள். இப்பல்லாம் ஃபுல் அறுவை சிகிச்சை தேவை யில்லை லேப்ராஸ்கொபிக் சர்ஜரி (துழை) போதும், ரத்த சேதம் அதிகம் இல்லை மற்றூம் 3 நாட்களீல் டிஸ்சார்ஜ் ஆகலாம். அப்புறம் குடம் மற்றூம் வெயிட் துக்கவே கூடாது. அப்படி தூக்கினால் அந்த மெஷூம் கிழிந்து இன்னொரு ரிப்பேர் சர்ஜரி தேவை. முடிந்த அளவு ஹெல்தியா இருந்தா இது வர்ரது கஷ்டம் அல்லது நல்ல அப்டமன் கரன்ச் செய்தால் கூட இந்த சதையை ஸ்ட்ராங்காக வைத்து கொள்ளலாம். சாப்பிட்ட அரை மணி நேரத்திர்க்கு எந்த வேலையும் கண்டிப்பாக செய்ய வேண்டாம், நடப்பது கூட. முட்டியை மடக்கி வெயிட் துக்குவது இன்னொரு கேர்ஃபுல் அட்வைஸ்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக