தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 பிப்ரவரி, 2012

ஈழ வம்சம்-10 :-வம்சத்தில் வாழ வந்தவனே வழி பறித்தான் வரலாற்றில்

10 ,,,, வம்சத்தில் வாழ வந்தவனே வழி பறித்தான் வரலாற்றில் 



உலகம் போற்றும் அசோக சக்கரவர்த்தி வர்த்தி இவரே முதல் முதலில் கொல்பவன் வாழ்வான் .அவனே ஆள்வான் என்பதை நிரூபித்து காட்டியவர் ..அதாவது இவனது தந்தை ,அதாவது சந்திரகுப்தனின் மகன் பிந்துசாரருக்கு 12 மனைவிகள் 101 பிள்ளைகள் இவர்களில் ஒருவன் தான் அசோகன் .இவர்கள் மௌரிய வம்சத்தினர் .இவர்கள் ஆண்டது அன்றைய மகத நாடு- தலைநகரம் பாடலி புத்திரம் .இன்றைய பீகார் தலை நகரம் பாட்னா ..அரசேறும் ஆசையில் ஆட்கொலை செய்வது அன்றில் இருந்தே ஆரம்பம் ஆனது அதாவது பிந்துசாரருக்கு பின் யார் அரசாள்வது என்ற பிணக்கில் 99 சகோதரர்களையும் அசோகர் கொலை செய்தார் .சகோதரி திஷ்யாவை மட்டும் உயிர் வாழ விட்டார் -.மௌரிய அரசர்கள் கொடுங்கோல் அரசர்களாகவே ஆரம்பத்தில் இருந்துள்ளார்கள் .முதல் அரசன் சந்திரகுப்தன் தான் செய்த தவறுகளுக்கு பரிகாரமாகவே சமண சமயத்தை தழுவி துறவி ஆனான் .அசோகன்,மனமாற்றம் அதாவது அன்றைய கலிங்கமும் இன்றைய ஆப்கானிஸ்தானும் ஆகிய கலிங்க அரசர்களுடனான போரில் 100000 போர்வீரர்களை கொன்றும் 150000 இலட்சம் போர்வீரர்களை சிறைப்பிடித்து சித்திரவதை செய்ததையும் எண்ணியே மனம் மாறி புத்த மதத்தை கைக்கொண்டார் .இதற்கு முதலே இவரது மனைவி தேவி என்ற வணிக குல பெண் புத்த மதத்தையே சேர்ந்து இருந்தார்

இவர்களுக்கு பிறந்த பிள்ளைகளே மகேந்திரனும் சங்கமித்தையும்( சங்கமித்தை ,இயற்பெயர் அல்ல )
அசோகன் புத்த மதத்தை தழுவியதும் தனது சொத்துக்கள் உடைமைகள் அனைத்தையும் புத்த தர்மத்துக்கு கொடை செய்து தனது பெயரையும் தேவனை நம்பிய பிரிய தர்ஷன் என்று மாற்றிகொண்டான். மகாவம்சத்தில் தீசன் என்ற அனுராத புர அரசனுக்கு தேவ நம்பிய தீசன் என்று புனை புகழ் பெயர் .அதுபோலவே அசோகனும் தேவியும் மகனுக்கு மகேந்திரன் என்று வைத்த பெயரை பிற்காலத்தில் ஆண்ட ஒரு சிங்கள அரசனின் பெயர் பொருள் பட மகிந்தன் என்று மகா நாம தீரர் இல்லை தேரர் மாற்றி கொண்டார் .நாமங்களை தேவைக்கு ஏற்ற வாறு மாற்றியதால் தான் மகாவம்ச மகாநாம தேரர் என்று பெயர் பெற்றாரோ என்பதும் எனக்கு தெளிவில்லை.

அசோகனுடன் போரில் முழுமையாக தோற்ற கலிங்கதேசத்தவர் யார்? சிஹா பாகு வம்சத்தினர் சிங்களம் சொல்லும் தந்தை தேசத்தவர் .தேரர் மகா வம்சத்திலும் பல்வேறு எழுத்தாளர்கள் பல்வேறு வரலாற்று நூல்களிலும் எழுதியும் ஏற்று கொண்டும் உள்ளார்கள் .பண்டு வாசன் விஜயன் தம்பி சமிந்த மகன் என்று அவன் வம்சத்தில் வந்த பண்டு காபயனின் பேரன் தேவ நம்பிய தீசன் என்கின்றார்கள்.அப்படியாக இருந்தால் அசோகனால் தந்தை நிலம் அழிக்க படும் போது ஈழத்தின் வலிமை பொருந்திய அரசர்களாய் இருந்த இவர்கள் ஏன் உதவிக்கு போகவில்லை ?போகாவிட்டாலும் பரவாயில்லை ஏன் எதிராளியின் பக்கம் சாய்ந்து அவன் மேற்கொள்ளும் பௌத்த மதத்தை தாமும் கைக்கொண்டார்கள் ?அவர்கள் பெயர்களை புகழ் மாலைக்காக தங்களுக்கும் சூட்டி கொண்டார்கள் .எனவே பாண்டி நாட்டில் இருந்து வந்த பண்டு வாசனுக்கு விஜயன் பரம்பரை பற்றியோ அவன் தோழர்களின் தந்தை நிலம் பற்றியோ தொடர்பும் இல்லை அக்கறையும் இல்லை

 அசோகன் வரலாற்றிலும் கொடுங்கோல் அரசனான அவன் மக்களை சித்திர வதை செய்து கழுவேற்றி கொலை செய்து பார்ப்பதை பல சந்தர்பங்களில் ரசித்தவன் சொந்த மகன் குணாளனை குருடனாக்கியவன் .பாவத்தை பலமுறை தெரிந்தே செய்து விட்டு கடைசி காலத்தின் உண்மையை உணர்ந்த பௌத்தன் என்று சொல்வது அடித்த கையாலேயே வருடி விட்டால் வலி உடனே தீர்ந்து விடும் என்பது போலவே  புரிகின்றது .அசோகன் தேவனை நம்பிய பிரிய தர்ஷன் என்பது இவன் தனக்கு தானே சூட்டி கொண்ட பெயர் .புத்தர் உண்மையை உணர்ந்த பௌத்தத்தில் செய்த உயிர் கொலைக்கு பரிகாரம் தேடும் படி எங்கும் சொல்லவில்லை .உலக சகல உயிர்களுக்கும் துன்பத்தை கொடுக்கவேண்டாம் என்று தான் போதனை செய்தார் .புத்தர் தன்னை கடவுள் என்றோ உண்மையை உணர்த்தும் பௌத்தத்தை மதம் என்றோ எந்த ஒரு சந்தர்பத்திலும் சொல்லவில்லை .எனவே தானாக பெயர் சூட்டிய அசோகன் சொன்னவழியில் தான் அவனால் அனுப்பப்பட்ட பிக்குகளின் வழி நடத்தலில் இன்றைய சிங்களவர்கள் வாழ பழகினார்களே தவிர புத்தர் சொன்னது எதையுமே அவர்கள் கருத்தில் கொண்டதாகவோ அவர்கள் சிந்தையில் உள்ளதாகவோ இன்று வரை உணர முடியவில்லை

மகேந்திரன் மகாவம்சம் சொல்லும் மகிந்தன் ,சங்கமித்தரை ,அதாவது பௌத்த சங்கத்தில் இணைந்து பிக்குணியாகிய முதல் பெண் அசோகரின் மகள் இவளது இயற்பெயர்  அறிய முடியவில்லை .இவர்கள் வந்து இறங்கிய இடம் நாக தீபம் என அழைக்கபடுகின்ற மணிபல்லவத்தில் ஒரு சிறிய தீவில் அத்தீவு இன்று நயினாதீவு என்று அழைக்கபடுகின்றது வணிக கப்பல்கள் வந்து போகும் பண்டைய துறைமுகங்களில் ஒன்று சில வரலாற்று ஆசிரியர்கள் சம்பு கோளம் என குறிப்பிட்டது இந்த துறைமுகமா என்பது தெளிவில்லாமலே இன்னும் இருக்கின்றது . இந்த துறை முகத்திலேயே பிற்காலத்தில் மணிமேகலை தாயை பிரிந்து வந்து அழுது கத்திய தாகவும் அதனால் இந்த இடத்தை இன்று அந்த ஊரில் வாழ்வோர் கத்திய குடா என்றும் அழைப்பார்கள் ,,இது ஒரு செவி வழி செய்தி .இவ்வாறு ஈழத்தின் வடபால் உள்ள தீவொன்றில் அதுவும் முற்று முழுதாக தமிழர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் வந்திறங்கிய இவர்களை பூர்வீக நாகர்கள் ஏற்கனவே புத்தர் வருகையின் போதும் அவர் போதனைகளை அறிந்திருந்ததாலும் வரவேற்று தகுந்த மரியாதைகள் செய்து உபசரித்தார்கள் .வந்தாரை வாழ வைக்கும் மரபில் வந்தவர்கள் வந்தவர்களை சிறந்த முறையில் வரவேற்றே இருப்பார்கள் .உறுதியான கொள்கைகள் கொண்ட நாகர்கள் பௌத்தத்தை இன்னொரு மதம் என்று பிரித்துபார்க்க விரும்பவில்லை. புத்தர் போதித்த படி உண்மையை உணரும் மார்க்கம் என்ற உறுதியில் இருந்தார்கள் .இதனால் நாகர்களை மதம் மாற்ற நினைத்த எண்ணம் நிறைவேறாததால் மகேந்திரன் சங்கமித்தை குழுவினர் நயினாதீவில் ஒரு மரத்தை நட்டு ஒரு பித்த பீடிகையை அமைத்த பின்னர் (அது இன்று நயினாதீவில் இருக்கும் புத்த கோவில் அல்ல) களனிக்கும் சென்றார்கள் அங்கிருந்து மிகுந்தலைக்கும் சென்றார்கள் .மிகிந்தலை காட்டுக்குள் வேட்டை ஆட சென்ற தீசன் இவர்களை சந்தித்தான் .அங்கிருந்தே இவர்களை மகாமேக வனத்துக்கு அழைத்து வந்தான் .அதன் பின்னரே பௌத்த தர்மத்தை அவர்களிடம் இருந்து போதனையாக பெற்ற இவன் தனது ஆளுகைக்குள் இருந்த மக்களையும் அந்த மார்கத்தை தழுவ செய்தான் .இந்த இடத்தில் இந்த தீசன் யார் என்று தெளிவு படுத்த வேண்டும் .

 .பண்டு காபயனிடம் இருந்து அனுராத புரத்தை கைப்பற்றிய நாகவாணன் நீதி தவறாது கதிரை மலையில் இருந்து ஆண்டவேளையில் பண்டுகாபயனின் சுவர்ணபாலி என்ற இயக்கர் குல மனைவிக்கு பிறந்த மூத்த சிவன் .தந்தையின் தவறுக்கு மன்னிப்பு கேட்டு இழந்த அரசை பெறுவதற்காக தனக்கு நாக வாணன் மகளை திருமணம் செய்து தருமாறு கேட்டான் .நாக வாணனும் சம்மதித்து அவனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்து அவனை அனுராத புர அரசன் ஆக்கினான்.

மூத்த சிவனே முதலில் கதிரை மலை நாகர் குல அரசோடு திருமண உறவு செய்து கொண்ட கலப்பு மன்னன் , இவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள் இவர்களில் மூத்தவனே தீசன் .இவனே பிற்காலத்தில் தேவ நம்பிய தீசன் என்று அழைக்க பட்டான் .இவர்களின் வம்சத்தினரே ஈழத்தின் பூர்வீக வம்சத்தினரிடம் இருந்து விலகி சென்று பௌத்தத்தை மதமாக ஏற்று கொண்டு .பிரிவினையில் தனித்துவமாக செயல்பட தொடங்கினார்கள் எதோ ஒருவழியில் இவர்கள் உறவுகளாய் இருந்தாலும் மதம் பிரித்து மனித மனம் பிரித்து பிற்காலத்தில் தம்மை தனி இனம் என்று வெளிப்படுத்திய ,இவர்களுக்கு முன்னமே சமணம் ஈழத்தில் பரவி இருந்தாலும் சமணம் சைவத்தின் மூட நம்பிக்கையை நீக்குவதற்கான மார்க்கமாகவே இருந்தது பண்டுகாபயனின் தோல்விக்கு பின் சமணம் முற்றாகவே வலுவிழந்தே போனது .வட நாட்டிலும் சந்திர குப்தன் சமண துறவியாகி இறந்த பின் பேரன் அசோகன் அரசாள்வதற்கு செய்த சகோதர கொலைகளாலும் சமணம் மௌரிய தேசத்திலும் வலுவிழந்து போனது அசோகன் கலிங்க போருக்கு பின் பெளத்தை மதமாக்கி ஏற்று கொண்டதில் இருந்து இந்தியாவின் பெரும் பகுதியிலும் ஈழத்தின் அனுராத புர இராச்சியத்தில் பௌத்தம் ஒரு புதிய மதமாக பரிமாணம் கொண்டது.கால ஓட்டத்தில் ஈழவம்சத்தினர் சந்தித்த மிகப்பெரிய தாக்கம் , பௌத்தத்தை மதம் என்று தீசன் ஏற்று கொண்டதால் உருவானது .,கதிரை மலை இராச்சியத்துக்கு வாழ்ந்த மக்கள் எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி தனித்துவமாக தங்கள் பாரம்பரிய வாழ்வியலோடு ஒட்டி வாழ்தார்கள்.அனுராத புர ஆளுகைக்கு வாழ்ந்த மக்கள் மீது பௌத்தம் புதிய மதமாக திணிக்க பட்டது ஒரு புதிய மதத்தின் வருகை ஒரு பூர்வீக நாட்டின் பூர்வீக வம்சத்தின் வாழ்வியல் வரலாற்றை தலை கீழாக மாற்றி விட்டது.



**புத்தர் கூறிய கருத்தக்கைவிடுத்து அசோகன் கூறியகருத்துக்களையே பௌத்துமதம் என்று சிங்களவர் கருதுகிறார்கள் என்ற கூற்று மிகவும் சிறப்புடைத்து. தவிர நயினாதீவில் "கத்தியாக்குடா" என்ற பரந்துவெளி இருக்கின்றுது. அதன் அருகாமையில் தில்லைவெளி என்ற நிலப்பிரதேசம் காணப்படுகின்றுது. இங்கிருந்துதான் தில்லை நடராசர் கோவிலுக்கு புக்கள் கப்பல்கலில் கூடை கூடையாகச் சென்றது என்பது கர்ணபரம்பரைக் கதையாக இப்பவும் இருக்கிறது. இந்தத் தீவுக்குவரும் கப்பல்கள் பழுதுபார்ப்பதற்கென்று கிழக்குப்பகுதியில் கடலோடு அண்மித்த பகுதி இருந்தது. இப்போது அது நிரவப்பட்டு நிலமாகிவிட்டது. அந்தப் பகுதியின்பெயர் "கப்பற்கிடந்தான்" என்று அழைக்கப்படுகின்றது. 


**ஆரம்ப காலத்தில் மிக சிறந்த வணிக துறைமுக மாய் கத்திய குடா வில் இருந்த துறைமுகம் இருந்ததாக கருத இடம் உண்டு காவிரி பூம் பட்டினத்துடனான தொடர்பு மௌரியர்குடனான தொடர்பு ,,அரபு நாட்டில் இருந்து எல்லாளன் குதிரை வருவித்தது .மாநாயக்க செட்டி நவ ரத்தினங்களை பெறுவதற்கு வந்தது போன்ற சம்பவங்களை வைத்து பார்க்கும் போது உறுதியாகின்றது பிற்காலத்தில் கப்பல்கள் பழுது பார்க்கும் தண்ணீர் எண்ணைகள் தேவையான பொருள்களை மாற்றும் இடமாக இருந்ததாகவும் பல்வேறு வரலாறுகள் உண்டு .கங்கை ஐயா .இந்த இடத்தை கப்பல் கிடந்தான் என்று சொல்வதும் இந்த இடத்தில் பல கப்பல்கள் தரித்து இருக்க கூடிய வசதி இருந்தது என்பதை விளங்கி கொள்ள முடிகின்றது ..இந்து சமுத்திரத்தின் நீரோட்டத்தில் இந்த கத்திய குடா பகுதியின் அமைவிடத்தை அறிந்தவர்கள் மனக்கண்ணில் நினைத்து பார்த்தால் அதன் முக்கியத்துவம் எளிதாக புரியும் ..கர்ணபரம்பரை கதையாயினும் தில்லைவெளி பிடாரி அம்பாள் ஆலயம் உள்ள இடத்தில் பிற்காலத்திலும் மஞ்சள் அலரி மட்டுமல்ல வேறு பலவகை அலரி மரங்களும் நிறைந்து இருந்தது!


**ஜம்பு கோள பட்டினம் எனப்படுவது தற்போதைய மாதகலுக்கு அண்மித்த பகுதி என்பது எனது கருத்து. இந்த இணைப்பை பார்க்கவும்.
http://www.noolaham.net/project/04/358/358.htm

** இன்றைய ஆப்கானிஸ்தான் பழைய கலிங்க நாடு என்பதில்  சந்தேகமாக இருக்கிறது. இந்த இணைப்பை பார்க்கவும்.
http://en.wikipedia.org/wiki/Kalinga_(India)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக