தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

பாரதியின் கையெழுத்து &மகாத்மா காந்தியின் தமிழ்க் கையெழுத்து.


                                                             பாரதியின் கையெழுத்து
                                                புரட்சிக் கவி பாரதியாரின் கையெழுத்து 
பாரதியின் கையெழுத்து & மேலே உள்ள படம் மகாத்மா காந்தியின் தமிழ்க் கையெழுத்து.
தமிழ் மக்களோடு தொடர்பு கொண்டு தமிழர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தென் ஆபிரிக்காவில் அவர்களுக்காகப் பாடுபட்ட காந்தி அடிகளாருக்கு நண்பராக விளங்கிப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர் தாயார் உடல்நலமில்லாமலிருந்தபோது காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 ரூபாய்பணவுதவி அனுப்பினார் அதில் காந்தி அடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதும் தமிழில் கையொப்பமிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் பாரதி மணிமண்டபம் அமைத்தபோது அதற்கான வாழ்த்தைத் தமிழில் எழுதினார். இவற்றைத் தவிர நீரில் எழுத்தொக்கும் யாக்கை என்பதையும் தமிழில் தம் கைப்பட எழுதியுள்ளார். மோ.க.காந்தி என்று பல சந்தர்ப்பங்களில் தமிழில் கையெழுத்திட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக