தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 பிப்ரவரி, 2012

மனைவிக்கு மரியாதை!


மனைவிக்கு மரியாதை

ஆக்ராவின் யமுனை நதிக்கரையில், மும்தாஜின் நினைவாக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் போன்று, எகிப்திலும் மன்னன் நாமசேஸ் தன் மனைவி நெபர்டேரி நினைவாக நினைவாலயத்தை உருவாக்கினார். இதனை "எகிப்தின் தாஜ்மஹால்' என அழைக்கின்றனர். 

இந்த நினைவாலயம் "அரசி கோயில்' என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 22ல் சூரியனின் ஒளிக்கதிர்கள் இந்தக் கோயிலுக்குள் விழும்படி வடிவமைத்துள்ளனர். அந்த நாளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இந்த "எகிப்து தாஜ்மஹாலை' உள்ளூர் மக்கள், அபுசிம்பெல் கோயில்கள் என அழைக்கின்றனர். இந்த நினைவுச் சின்னம் 3 ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையானவை. எகிப்து பிரமிடுகளுக்கு அடுத்தபடியாக, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத்தலமாக "எகிப்தின் தாஜ்மஹால்' உள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக