தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 பிப்ரவரி, 2012

ஈழ வம்சம் -12 :-81 குறுநில அரசை ஒரு குடையில் ஆண்ட ஈழ வம்ச தமிழ் மன்னர்கள் ,


ஈழ வம்சம்

12 ) ,,,81 குறுநில அரசை ஒரு குடையில் ஆண்ட ஈழ வம்ச தமிழ் மன்னர்கள் ,

கரு முகில் கூட்டங்கள் விலகிடாத அந்த வைகறை வேளையில் ,நீம்மதியை இழந்து உறக்கத்தை மறந்தர்வர்களும் 
அதிகாலையில் அயர்ந்து தம்மை மறந்து தூங்கி இருக்கும் வேளையில் குதிரை வீரர்கள் கோட்டை வாசலினுள் அதிவகமாக உள் நுழைந்தனர், கோட்டை வாயில் காவலர் தலைகள் ஒரு சில வினாடிகளின் தரையை தொட்டது .ஈழ சேனனின் தோள் பலத்தை நன்கு அறிந்திருந்த நாக குத்தன் இன்று தான் அவன் வாள் வீச்சின் முழுமையான வலிமையை உணர்ந்தான் . இவர்களை எதிர்த்தவர்கள் தலைகள் மண்ணோடு மண்டி இட்டது .அபாயக் குரல்களின் பெரும் கூக்குரலால் வாய் வீரம் பேசிய தீசன் சகோதரர்கள் இவர்கள் கோட்டைக்குள் புகுந்த செய்தி அறிந்ததும் பாதுகாப்பு வழிகள் ஊடாக பெரும் காடுகளில் ஓடி ஒழித்தார்கள் .பெரும் போர் ஒன்று நிகழும் என்று எண்ணி வந்த ஈழ சேனனும் நாக குத்தனும் நண்பர்களும்,அதிக எதிர்ப்பு இன்றியே அனுராத புரத்தை கைப்பற்றினர் .வளை வாணனால் உதவிக்கு அனுப்ப பட்ட பெரும் படையும் வந்து சேர இவர்கள் படை பலத்துக்கு அஞ்சிய தீசன் சகோதரர்களுடைய உயிர் தப்பிய படையினர் இவர்களிடம் சரணடைந்தனர் .தந்தை ஏற்கனவே தீசன் சகோதரர்களையும் உங்களை எதிர்க்கும் ஆயுததாரிகளையுமே தண்டிக்கும் படி கட்டளையிட்டு இருந்ததால் நாக குத்தன் சரண் அடைந்தவர்களை நல்ல முறையில் எந்த தீங்கும் செய்யாமல் ஏற்றுகொண்டான்.சரணடைந்தவர்களில் நல்லவர்கள் போல் நடித்த நய வஞ்சகர்களும் இருந்தார்கள் என்பது ஈழ சேனனின் இருபத்து இரண்டு வருட ஆட்சியின் முடிவிலேயே பூர்வீக ஈழவம்சத்தினரால் உணரப்பட்டது .அது பற்றி அந்த கால கதை நகர்வில் பார்ப்போம்.
உண்மை வரலாறு நான் மேலே எழுதிய திசையில் சென்று கொண்டு இருக்கையில் மாகாவம்ச மாயையில் குழப்பி போய் இருக்கும் மக்களை தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் நான் இருக்கின்றேன் ,,அதாவது பூர்வீக தமிழர்கள் ஆண்ட நிலம் ஈழ தேசம் என்பதை சொல்ல விரும்பாத மகா நாம தேரர் தென்னிந்தியாவில் இருந்து வந்த குதிரை வியாபாரிகள் சேனனும் குத்தனும் (குத்திகனும்)சூர தீசனிடம் இருந்து நாட்டை கைப்பற்றினார்கள் என்கின்றார் .,முதலில் இரு சாதாரண குதிரைவியாபாரிகளிடம் படை பலத்தோடு இருந்த நாட்டை இழந்தது என்று சொல்வதற்கு தேரருக்கு வெட்கம் அவமானம் இல்லையா ,இழந்திருந்தாலும் மீள இந்த இருவரிடம் இருந்து கைப்பற்றுவதற்கு இருபத்தி இரண்டு வரிடம் தேவையா ,இருந்தாலும் அவர் பூர்வீக தமிழர்களான ஈழசேனன் நாக குத்தனிடம் நாட்டை இழந்தான் சூர தீசன் என்பதை விட அந்நியனிடம் இழந்தார்கள் என்று சொல்வதில் ஒரு தற்பெருமையும் சுயநலமும் அவர் அடி மனதில் இருந்திருக்கின்றது .முதலாவது நாகர்கள்! கதிரமலையை ஆண்ட காலத்தில் அவர்கள் மட்டுமல்ல தென்னிந்தியர்களும் குதிரைகளை அரபு தேசங்களில் இருந்தே வர வளைத்தார்கள் .இதை பல்வேறு வரலாறுகள் உறுதி படுத்துகின்றது. நாக அரசர்களும் அன்றைய நாகதீபத்தில் அதாவது யாழ் குடாநாட்டின் மேற்பகுதியில் பிறகாலத்தில் அதாவது மூன்றாவது (நாக வளை வாணன்,தேவ நம்பிய தீசன் காலத்தில்) மிகப்பெரிய கடல் கோளால் தீவாகிய நயினாதீவில் உள்ள துறைமுகத்திலேயே அரபு கப்பல்கள் வந்து குதிரைகளை நாக அரசர்களுக்கு விற்றார்கள் இவர்களிடம் இருந்து நவரத்தினங்களையும் யானை தந்ததையும் அவர்கள் தேசங்களுக்கு பண்டமாற்றாக வாங்கி சென்றார்கள். எனவே ஈழத்துக்கு குதிரை வியாபாரிகளாக வந்தவர்கள் முஸ்லீம் களே இவர்களின் சந்ததியினர் பிற்காலத்தில் துறைமுகங்கள் சார்ந்த மன்னார் ,திருகோணமலை நயினாதீவு மட்டகிளப்பு ஆகிய பிரதேசங்களில் வந்து தங்கி வாழத்தொடங்கினார்கள் இவற்றை பின்னர் அந்த கால நீரோட்டத்தில் விரிவாக பார்ப்போம் .எனவே தீரர் அதாவது தேரர் சொல்வது போல் சேனன் குத்தன் என்று உலகில் எந்த ஒரு நாட்டிலும் முஸ்லீம்களுக்கு பெயர் இல்லை .எனவே தேரர் சொல்வது உண்மையை மறைக்க சோடிக்க பட்ட பொய் என்பது நிரூபிக்க படுகின்றது.இங்கேயே தான் விழி இழந்தாலும் எதிரி உயிரை இழக்க வேண்டும் என்ற கருத்து உள்வாங்க பட்டுள்ளது

அனுராத புரத்தை கைப்பற்றிய நாக குத்தனும் ஈழ சேனனும் தங்களது அரசை உறுதியாக வைத்திருப்பதற்காக குறுநில அரசர்களை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தார்கள் ஈழ சேனனின் மூதாதையினரின் உறவினர்கள் ஆண்ட மட்டக்களப்பு பகுதியயை இவர்கள் காலப்பகுதிலேயே மீண்டும் சிறந்த நகரமாக நாக குத்தன் வடிவமைத்து அங்கும் 7 குறுநில அரசுகளை உருவாக்கி அரசர்களை நியமித்தான் .ஈழ சேனன் மூதாதையர் குலத்து இயக்கர்கள் வாழ்ந்த திருகோண மலையையும் புனர் நிர்மாணம் செய்து சிறந்த நகரமாக்கி அங்கும் 18 சிற்றரசர்களை நியமித்து மீண்டும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தார்கள். அரசின் கீழ் கதிர மலை இருந்த 26 குறுநில அரசர்களும் ஏற்கனவே கதிரமலை அரசின் ஆளுகையின் கீழேயே இருந்தனர் சகலபகுதிகளையும் விஸ்தரித்த இவர்கள் 81 குறுநில அரசர்களை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்து அரசாண்டார்கள் ,கல்யாணி அரசையும் இவர்கள் உறவினர்களே ஆண்டார்கள் ஆனால் இந்த கல்யாணி அரசர்கள் உருகுணையில் அதாவது மாணிக்க கங்கையின் கரை பகுதியில் உள்ள இன்றைய மாகம அருகில் இருந்த காட்டு பகுதியில் சென்று ஒளித்து இருந்த தீசன் சகோதரர்களுடன் ரகசிய உறவுகளை பேணி வந்தார்கள் காலப்போக்கில் அவர்களுடன் திருமண உறவுகளை செய்து அவர்களை மறுபடியும் நாட்டு பகுதிகளுக்குள் வர மறைமுகமாக ஆதரவு அளித்தார்கள் .

ஈழ சேனனும் நாக குத்தனும் மறு புறம் தங்களது படை பலத்தையும் ஆளுகையையும் விஸ்தரித்து கோட்டைகளையும் அரண்மனைகளையும் கட்டியதோடு கடல் கோளால் அழிவுற்ற மாதோட்ட துறை முகத்தை திருத்தம் செய்ததோடு ஊர்காவற்றுறையிலும் மட்டக்களப்பிலும் புதிய துறைமுகங்களை நிர்மாணித்தார்கள் . இவர்களே கோணமலையில் இயற்கையாக அமைந்த கடல் தொடு தளத்தையும் துறைமுகமாக பாவனையில் ஈடு படுத்தினார்கள் ,இவர்கள் காலத்திலேயே அரசர்கள் அரபு நாடுகளில் இருந்து பெரும் தொகையான குதிரைகளை வரவழைத்தார்கள் ஈழ வரலாற்றில் முதன் முதலில் மிகப்பெரிய குதிரை படையையும் யானை படையையும் வைத்திருந்த அரசர்கள் இவர்களே .இவர்கள் காலத்தில் யானைகளை அதிவேகமாக ஓடுவதற்கு பயிற்றுவித்து இருந்தார்கள் இவ்வாறு சிறப்பாகவும் நீதி தவறாமலும் ஒரு மத சார்பில்லாமலும் இனங்களை பிரிவினை கண்ணோட்டத்தில் பார்க்காமலும் ஈழ சேனனும் நாக குத்தனும் அரசாண்ட வேளையில் .அசைக்க முடியாத சாம்ராச்சியமாக இருந்த அனுராத புரத்தை தீசன் சகோதரர்களால் கைப்பற்ற முடியவில்லை .அவர்கள் வஞ்சக சூல்சிகளால் அரசை பெற முயற்சிக்கும் மனோ நிலையிலேயே செயல்பட்டார்கள். நேரடி போர் எந்த வேளையிலும் புரிய ஆரம்பத்தில் முன்வரவில்லை .எனவே போர் இல்லாத நாட்டில் அதிகமானவர்களை படையில் வைத்திருப்பது நன்மையான விடயம் இல்லை என்பதை உணர்ந்த இவர்கள் தமது படையினர் எண்ணிக்கையை குறைத்து ஏனைய நாட்டு நலன்களில் ஈடுபடுத்தினார்கள் .நாக குத்தனும் .தனது தங்கை பொன்னம்மை நாகச்சியரை ஈழ சேனனுக்கு திருமணம் செய்து வைத்து முழுமையாக அனுராத புர அரசையும் அவனிடமே கொடுத்து விட்டு. கதிரை மலைக்கு சென்று ஈழ ஊர் ஈழசேனன் தங்கையை தானும் திருமணம் செய்து கொண்டு தன் வயோதிப தந்தைக்கு அரசியல் பணிகளில் ஓய்வு கொடுத்துவிட்டு கதிரைமலை அரசை ஆண்டான் .,

இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் தான் சில விளைவுகள் விபரீதம் ஆக தொடங்கியது கதிர மலை நாக அரசர்களின் வம்சத்தில் கல்யாணி அரசர்களே வம்சம் தோறும் திருமண உறவுகளை மேற்கொண்டு வந்தார்கள் .மூத்த சிவன் என்ற பாண்டிய பரம்பரையில் வந்தவன் .தந்தை பண்டு காபயன் இழந்த நாட்டை பெற வளை வாணன் அக்காவை முதலில் திருமணம் செய்த பின் இந்திர விழாவுக்கு வந்த சோழன் நெடும் கிள்ளி எனற சோழ இளவரசன் வளை வாணன் மூத்த மகள் பீலிய வளை நாகசியாரை காதல் திருமணம் செய்தான் , தற்பொழுது இளைய மகள் பொன்னம்மை நாகசியாரை ஈழ சேனன் திருமணம் செய்ததால் இவர்கள் இடையே மனக்கசப்பு உருவானது .இதனால் கோபம் உற்ற தென்பகுதி கல்யாணி நாக அரசர்கள் .மூத்த சிவன் பிள்ளைகளுடனும் அவன் உறவினர்களுடனும் உறவுகளை மேற்கொண்டார்கள் .இதனால்.ஓடி ஒளித்து இருந்த சூர தீசன் மகா சிவன் சகோதரர்கள் வெளியில் தலை காட்ட தொடங்கினார்கள் காலபோக்கில் உருகுணை இராச்சியம் என்று ஒரு சிற்றரசை மாணிக்க கங்கை பகுதியில் களனி அதாவது கல்யாணி அரசர்களின் உதவியுடன் இரகசியமாக அமைத்தார்கள் .

ஈழ சேனன் இல்லத்துணைவியாக முடிக்கு உரிய அரசியாக பொன்னம்மை நாகசியாரை திருமணம் செய்து இல்லறத்தில் இனிமையாக இருவீரும் நல்லறங்கள் பல செய்து வாழ்ந்து வந்தார்கள் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்

பிறந்த குழந்தைகள் யார் என்பதையும் அவர்கள் ஈழவம்ச வரலாற்றில் எவ்வாறு வாழ்தார்கள் என்பதையும் ஈழ சேனன் ஆண்ட அனுராத புர அரசு எவ்வாறான துரோகங்களாலும் சூழ்சிகளாலும் மீண்டும் கலப்பு வம்சத்தினரின் ஆளுகைக்குள் உட்பட்டது என்பதையும் வளரும் தொடரில் வரலாற்றின் நிகழ்வுகளில் பார்ப்போம் 



சிவ மேனகை 


**எங்கிருந்து இவ்வளவு அறிவை பெறுகின்றீர்கள்,வயதை கணிக்கமுடியவில்லை,ஆனால் வரலாற்று,பக்திமார்க்க அறிவில் மிக முதியவராக உள்ளீர்கள்.எனது தந்தையார் வருடங்களுக்கு முன் வில்லுப்பாட்ட்டு,கதாகலாட்சேபம் போன்றவை கேட்டு அறிந்த விடயங்களை எப்படி நீங்கள் பெற்றீர்கள்?உங்கள் அறிவை எல்லோருக்கும் பகிர்ந்து தமிழர் கலை,மருத்துவம்,பண்பாட்டை வளர்க்க எனது வாழ்த்துக்கள்.இனவிரோதத்தை மட்டும் தவிர்க்கலாம்,காரணம் வரலாறே நாம் சகோதரர் என்றே ஒரே ரத்தம் என்றே பறை சாற்றுகிறது.அவர்கள் அறிவிலிகள் துரியோதனாதியோர் போல,உறவையே அழிப்பவர்கள்.நாம் தருமமாய் செயற்படுவோம்,கண்ணன் போல நமக்கும் கடவுள் உதவுவான்.பொய்களாலும் திரிப்புகளாலும் வரலாறுகளை பொய்யாக்காது தமிழன் புகழ் வளர்ப்போம்!!நன்றி! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக